பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகை மீராமிதுன், தனது நண்பருடன்
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி, குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக நடிகையும், மாடலுமான மீரா மிதுனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பின், இருவரும் ஜாமீனில் விடுதலையான நிலையில், அவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொள்வதற்காக இருவரும் நேரில் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எஃப்.ஐ.ஆர் படத்தை தடை செய்யக - விஷ்ணு விஷால் வீட்டை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பு போராட்டம்
அதன்படி, நீதிபதி அல்லி முன் ஆஜரான மீராமிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்பு, வழக்கு விசாரணை 21ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக அன்றைய தினமும் ஆஜராக மீராமிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.