சூப்பர் மாடல் மீரா மிதுன், மீண்டும் அதிர்ச்சி வீடியோ வெளியிட்டிருக்கிறார். நடிகர்கள் சூர்யா, விஜய் பற்றி தான் பேசியதற்கு காரணம் அதிமுக பிரமுகரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டி தான் என்றும் அதற்காக தான் மன்னிப்புக் கோருவதாகவும் கூறியுள்ளார். வீடியோவின் முழு விவரம் என்ன?
சூப்பர் மாடல் என தன்னை அழைத்துக் கொள்ளும் மீரா மிதுன் கடந்த பிப்ரவரி மாதம், தான் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தன் மீதான துன்புறுத்தல்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அனைவர் மீதும் எடுக்க வேண்டும் என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து, கண்ணீரும் கம்பலையுமாக வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோ எடுபடாத நிலையில், செவ்வாய்க்கிழமை, தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னைக் கொலை செய்வதற்காக 8 பேர் கொண்ட கும்பல் துரத்தி வருவதாக பெங்களூருவில் இருந்தபடி வீடியோ வெளியிட்டார்.
இந்த நிலையில், புதன்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், தான் இதுவரை நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாகப் பேசியதற்கு, திருநங்கையும், அதிமுக பிரமுகருமான அப்சரா ரெட்டி தான் காரணம் என்று பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
அப்சரா ரெட்டியின் சைபர் புல்லிங்கில் சிக்கி, நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாகப் பேசி விட்டதாகவும் அதற்காக அவர்களிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் வீடியோவில் கூறியுள்ளார்.
அப்சரா ரெட்டியை உடனடியாக கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுகவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா மிதுன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
வீடியோவில், சிரம் தாழ்ந்த மன்னிப்பு கோருகிறேன் என்பதற்குப் பதிலாக தரம் தாழ்ந்த மன்னிப்பு என 2 முறை மீரா மிதுன் கூறியதை வைத்து கமனெ்ட்டில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகி்ன்றனர்.
இதற்கிடையே, மீரா மிதுன் போன்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் அளித்து தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என திருநங்கை அப்சரா ரெட்டி நமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். மீரா மிதுனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.