• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மீண்டும் நடிக்க வந்த நடிகை மீரா ஜாஸ்மின்

மீண்டும் நடிக்க வந்த நடிகை மீரா ஜாஸ்மின்

ஜெயராம் | மீரா ஜாஸ்மின்

ஜெயராம் | மீரா ஜாஸ்மின்

சுமார் 3 வருட இடைவெளிக்குப் பிறகு நடிகை மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

  • Share this:
லிங்குசாமி இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர் அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் கடைசியாக விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது ஆகிய படங்களில் நடித்திருந்த இவர் 2014-ம் ஆண்டு துபாயில் பணியாற்றும் அனில் ஜான் என்ற பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அத்ன் பின்னர் ஒரு சில மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த மீரா ஜாஸ்மின் 2018-ம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக திரைப்படங்களில் எதுவும் நடிக்கவில்லை.

இந்நிலையில் பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.

2004-ம் ஆண்டு பாடம் ஒன்னு: ஒரு விலபம் என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் மீரா ஜாஸ்மின், கேரளா, தமிழ்நாடு அரசின் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழக அரசு 2009-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இதுதவிர ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: