Home /News /entertainment /

சமூகவலைத்தளத்தில் புதிய கணக்கை தொடங்கிய மீரா ஜாஸ்மின்...!

சமூகவலைத்தளத்தில் புதிய கணக்கை தொடங்கிய மீரா ஜாஸ்மின்...!

மீரா ஜாஸ்மின்

மீரா ஜாஸ்மின்

சில மணி நேரங்களில் மீரா ஜாஸ்மினின் கணக்கை 23,000 க்கும் அதிகமானோர் ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர்.

  • News18
  • Last Updated :
நடிகை மீரா ஜாஸ்மின் இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார். அவருக்கு சக நடிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கையில் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து சினிமாவிலிருந்து ஒதுங்கினார் மீரா ஜாஸ்மின்.

2016 இல் மலையாளத்தில் வெளிவந்த பத்து கல்பனைகள் திரைப்படமே அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படமாகும். 2018 இல் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்த பூமரம் படத்தில் மீரா ஜாஸ்மினாக ஒரேயொரு காட்சியில் தோன்றினார்.

ஆடிய காலும், பாடிய வாயும், மேக்கப் போட்ட முகமும் அதிக நாள் ஓய்வு கொள்ள முடியாது. மீண்டும் தங்கள் துறைக்கே திரும்பிவிடும். மீரா ஜாஸ்மினும் சென்ற வருடம் மீண்டும் நடிப்புக்கு திரும்பினார்.

மீரா ஜாஸ்மின் நடித்த ரசதந்திரம், வினோத யாத்ரா படங்களை இயக்கிய சத்தியன் அந்திக்காடின் புதிய படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து நடிக்க அவர் முடிவு செய்துள்ளார்.

Also read... எதற்கும் துணிந்தவன் படத்துடன் மோதலை தவிர்த்த மெகா ஸ்டார் படம்!

நடிப்புக்கு திரும்பிய நிலையில் முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் புதிய கணக்கை மீரா ஜாஸ்மின் தொடங்கி தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நடிகர்கள் ரவி தேஜா, நடிகைகள் பார்வதி, கௌதமி, மாளவிகா, அதிதி பாலன் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துகள் கூறியுள்ளனர்.

சில மணி நேரங்களில் மீரா ஜாஸ்மினின் கணக்கை 23,000 க்கும் அதிகமானோர் ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர். மீரா ஜாஸ்மினும் ரவி தேஜா, மோகன்லால் போன்ற சில நட்சத்திரங்களின் கணக்கை ஃபாலோ செய்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி