நடிகை மீரா சோப்ராவின் தந்தையிடம் கத்தி முனையில் கொள்ளை!

நடிகை மீரா சோப்ராவின் தந்தையை மிரட்டி கத்தி முனையில் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மீரா சோப்ராவின் தந்தையிடம் கத்தி முனையில் கொள்ளை!
நடிகை மீரா சோப்ரா
  • Share this:
அன்பே ஆருயிரே, மருதமலை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தவர் நடிகை மீரா சோப்ரா. இவரது தந்தை டெல்லியின் போலீஸ் காலனி பகுதியில் மாலையில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரை கத்தி முனையில் மிரட்டி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக மீரா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், எனது தந்தை போலீஸ் காலனி பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த இரண்டு நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மொபைல் போனை பறித்துச் சென்றனர். இதுதான் டெல்லியின் பாதுகாப்பு நிலை” என்று பதிவிட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதை டேக் செய்திருந்தார்.

மற்றொரு ட்வீட்டில் டெல்லி காவல்துறைக்கு நன்றி தெரிவித்திருக்கும் மீரா சோப்ரா, “எது திருடு போனது என்பது முக்கியமல்ல. நம் வீட்டுப் பெரியவர்களை பாதுகாப்பதுதான் முக்கியம். வடக்கு டெல்லி காவல்துறைக்கு எனது வணக்கங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.


நடிகை மீரா சோப்ரா, பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.










First published: May 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading