மீரா சோப்ராவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த பிரபல நடிகரின் ரசிகர்கள் - ஆதரவுக் கரம் நீட்டிய சின்மயி

பிரபல நடிகரின் ரசிகர்கள் ட்விட்டர் வாயிலாக தனக்கு பாலியல் மிரட்டல் விடுப்பதாக நடிகை மீரா சோப்ரா தெரிவித்துள்ளார்.

மீரா சோப்ராவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த பிரபல நடிகரின் ரசிகர்கள் - ஆதரவுக் கரம் நீட்டிய சின்மயி
நடிகை மீரா சோப்ரா
  • Share this:
அன்பே ஆருயிரே, மருதமலை, இசை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்த நடிகை மீரா சோப்ரா, கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆரை விட மகேஷ் பாபு மிகவும் பிடிக்கும் என்று அவர் கருத்து தெரிவித்ததால், ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் மீரா சோப்ராவை வசைபாடி வருகின்றனர். அதில் பாலியல் மிரட்டல்களே அதிகம் இடம்பெற்றுள்ளதாக நடிகை மீரா சோப்ரா கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜூனியர் என்டிஆரை டேக் செய்து கருத்து பதிவிட்ட மீரா சோப்ரா, உங்களை விட மகேஷ்பாபு பிடிக்கும் என்று கூறியதற்காக (சில அநாகரிகமான பதிவுகளைக் குறிப்பிட்டு) இப்படி எல்லாம் நான் அழைக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. உங்களது ரசிகர்களால் எனது பெற்றோருக்கு இப்படிப்பட்ட வாழ்த்துகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.


இதுபோன்ற ரசிகர்களை பெற்றிருப்பது வெற்றி என்று நினைக்கிறீர்களா? எனது இந்த பதிவிற்கு பதில் சொல்வீர்கள் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து இப்படி மோசமாக பேசுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள் என்று பாடகி சின்மயி மீரா சோப்ராவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேவேளையில் ரசிகர்களின் மோசமான பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதை ஹைதராபாத் போலீஸ்க்கு டேக் செய்து நடவடிக்கைக்காக காத்திருக்கிறார் மீரா சோப்ரா. மேலும் தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: உயிரிழந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தை - தத்தெடுத்த பிரபல நடிகர்
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading