பாரதிராஜா இயக்கி நடித்துள்ள ‘மீண்டும் ஒரு மரியாதை’ ட்ரெய்லர் ரிலீஸ்!

  • Share this:
பாரதிராஜா இயக்கி நடித்துள்ள மீண்டும் ஒரு மரியாதை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா நடிப்பில் அவரிடம் உதவியாளராக பணியாற்றிய நிர்மல் குமார் இயக்கத்தில் ஓம் என்ற புதிய படம் உருவாக இருப்பதாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.

பின்னர் நிர்மல் குமாருக்கு ‘சலீம்’ படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் ‘ஓம்’ படத்தை மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பாரதிராஜாவே இயக்கி நடித்தார். ஐரோப்பாவில் வாழும் இலங்கைத் தமிழர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளிலேயே நடத்தப்பட்டது.


இந்தப் படத்துக்கு கவிஞர் வைரமுத்து, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் பாடல் எழுத என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். படத்தில் பாரதிராஜாவுடன் ஜோ மல்லூரி, மவுனிகா, நக்‌ஷத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இத்திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிக் கொண்டே போனது.

இதையடுத்து ‘ஓம்’ என்றிருந்த படத்தின் டைட்டிலை மீண்டும் ஒரு மரியாதை என மாற்றினார் பாரதிராஜா. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை நேற்று நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அதில் இத்திரைப்படம் வரும் 21-ம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்