Home /News /entertainment /

கணவர் வித்யாசாகர் இல்லாத முதல் திருமண நாள்.. கலங்க வைக்கும் மீனாவின் பதிவு!

கணவர் வித்யாசாகர் இல்லாத முதல் திருமண நாள்.. கலங்க வைக்கும் மீனாவின் பதிவு!

நடிகை மீனா

நடிகை மீனா

திருமண நாள் முடிந்த மறுநாள் கணவர் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை மீனா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

    நடிகை மீனா தனது 13வது ஆண்டு திருமண நாளில் கணவர் இல்லாததை நினைத்து வருந்தி, மிகவும் உருக்கமாக போஸ்ட் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மீனாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையான மீனா இப்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் கண்ணழகி மீனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் அவருடனே ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்தார். மீனா - ரஜினி ஜோடி தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் ஜோடியாக பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படத்திலும் மீனா நடித்து இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் மீனாவின் வாழ்க்கையில் ஒரு துயரமான சம்பவம் அரங்கேறியது.

    13வது ஆண்டு திருமண நாள்... கணவர் வித்யாசாகர் பிரிவால் கலங்கி நிற்கும் நடிகை மீனா!

    மீனாவின் கணவர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இவரின் மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் மீனாவுக்கு ஆறுதல் கூறி இருந்தனர்.அதே போல் திரைப்பிரபலங்கள் பலரும் மீனா கணவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மீளா துயரத்தில் இருந்த மீனாவுக்கு ரசிகர்களும் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் (ஜூலை 12) அன்று மீனாவின் 13 வது ஆண்டு திருமண நாள்.

    அவருக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சு.. சர்ச்சைக்கு பதில் சொன்ன பிக் பாஸ் இசைவாணி!

    இந்த தகவல் இணையத்தில் வைரலானது. அதுமட்டுமில்லை போன வருடம் 12வது ஆண்டு திருமண நாளன்று மீனா இன்ஸ்டாவில் பதிவு செய்த போஸ்டும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டது. இந்நிலையில், திருமண நாள் முடிந்த மறுநாள் கணவர் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை மீனா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Meena Sagar (@meenasagar16)






    அதில், “நீங்கள் எங்களுடைய அழகான ஆசீர்வதிக்கப்பட்ட நபர். ஆனால் எங்களிடம் (என்னிடம்) இருந்து விரைவில் நீங்கள் பறிக்கப்பட்டு விட்டீர்கள். இருப்பினும் எங்களுடைய இதயங்களில் என்றென்றும் நீங்கள் இருக்கிறீர்கள். உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான நல்ல உள்ளங்கள் எனக்கு ஆறுதல் கூறியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் அவர்களுடைய அன்பும் ஆதரவும் கண்டிப்பாக எங்கள் குடும்பத்திற்கு தேவை. அன்பும் ஆதரவும் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை கொண்டிருப்பதற்கு நாங்கள் மிகவும் நன்றி உடையவர்களாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Actress meena, Kollywood, Tamil Cinema

    அடுத்த செய்தி