நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 2 மணிக்கு நடைப்பெறவிருக்கிறது.
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு 7 மணியளவில் காலமானார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தார். 48 வயதான வித்யாசாகர் முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருந்தார்.
பின்னர், மார்ச் 2022-ன் இறுதியில், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனவே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் படிப்படியாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் நேற்று மாலை வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் இன்று மதியம் 2 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. அவர் கடைசியாக ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். ஜூன் 2009-ல் வித்யாசாகரை மணந்தார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். அவர் 2016-ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக நடித்திருந்தார்.
மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு - ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வித்யாசாகர் மறைவால் அதிர்ச்சியடைந்த திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலையும், மீனாவுக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் சரத்குமார், குஷ்பு, விக்டரி வெங்கடேஷ் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் வித்யாசாகர் மறைவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, தனது கணவர் வித்யாசாகருடன் இருக்கும் மீனாவின் படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress meena, Tamil Cinema