Home /News /entertainment /

Meena Husband Death: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

Meena Husband Death: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

மீனா குடும்பம்

மீனா குடும்பம்

வித்யாசாகர் மறைவால் அதிர்ச்சியடைந்த திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலையும், மீனாவுக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

    நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

    நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு 7 மணியளவில் காலமானார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தார். 48 வயதான வித்யாசாகர் முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருந்தார்.

    பின்னர், மார்ச் 2022-ன் இறுதியில், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனவே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் படிப்படியாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் நேற்று மாலை வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வித்யாசாகர் மறைவால் அதிர்ச்சியடைந்த திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலையும், மீனாவுக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்



    "ஒரு பயங்கரமான செய்தியைக் கேட்டு கண் விழித்தேன். நடிகை மீனாவின் கணவர் சாகர் நம்மிடையே இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது. அவர் நீண்ட நாட்களாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். மீனா மற்றும் அவரது இளம் மகளுடன் இதயம் செல்கிறது. வாழ்க்கை கொடுமையானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்திருந்தார் நடிகை குஷ்பு.





    ”மீனா மேம் மற்றும் நைனிகாவுடன் என் இதயம் செல்கிறது. குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று நடிகை ஹன்சிகா பதிவிட்டுள்ளார்.



    "நிம்மதியாக இளைப்பாருங்கள் நண்பர் சாகர். நீங்கள் மிகவும் தைரியமாக போராடினீர்கள். மீனா மற்றும் நைனிகாவுடன் மனம் செல்கிறது. இந்த இழப்பை போக்க எங்கள் பிரார்த்தனைகள்” என நடிகர் ஜெயம் ரவி பதிவிட்டுள்ளார்.



    நடிகை ரூபிணி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.



    ”நடிகை மீனாவின் கணவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். மீனாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நீங்கள் வலுவாக இருங்கள், அவரது ஆன்மா அமைதி கொள்ளட்டும்” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

    நடிகை மீனாவின் குடும்பப் படங்கள்!



    ”அன்புள்ள மீனா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் இழப்பிற்காக மிகவும் வருந்துகிறோம். கடவுள் வித்யாசாகரை இவ்வளவு சீக்கிரம் எடுத்துச் சென்றது கொடூரமானது” என நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.



    ”வித்யாசாகரின் திடீர் மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இக்கட்டான நேரத்தில் கடவுள் அவர்களுக்கு நிறைய பலம் தரட்டும்” என நடிகர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.



    "மீனாவின் வாழ்க்கைத் துணையின் துயரமான இழப்பில் மனம் உடைந்துவிட்டது. இந்த அமைதியற்ற நேரத்தில் என் கண்ணீரும் பிரார்த்தனைகளும் அவரோடும், அவர்களின் மகளோடும் உள்ளன. கடவுள் அவர்களுக்கு அன்பும் மன உறுதியும் அளிக்கட்டும்” என நடிகை கெளதமி தெரிவித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Jayam Ravi, Actress meena, Khushbu sundar, Tamil Cinema

    அடுத்த செய்தி