Home /News /entertainment /

Actress Meena: கணவர் வித்யாசாகருக்கு பிரியா விடை அளித்த நடிகை மீனா

Actress Meena: கணவர் வித்யாசாகருக்கு பிரியா விடை அளித்த நடிகை மீனா

கணவர் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்த மீனா

கணவர் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்த மீனா

சென்னை, பெசண்ட் நகர் மின் மயானத்தில் வித்யாசகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு 7 மணியளவில் காலமானார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தார். 48 வயதான வித்யாசாகர் முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருந்தார்.

    பின்னர், மார்ச் 2022-ன் இறுதியில், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனவே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் படிப்படியாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் நேற்று மாலை வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவரது மறைவால் அதிர்ச்சியடைந்த திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலையும், மீனாவுக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே சற்று முன்பு சென்னை, பெசண்ட் நகர் மின் மயானத்தில் வித்யாசகரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரின் இறுதிச் சடங்குகளை மீனாவும், அவரது மகள் நைனிகாவும் செய்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களை மனம் கலங்க செய்துள்ளன.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress meena, Tamil Cinema

    அடுத்த செய்தி