Home /News /entertainment /

Actress Meena Husband: நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்

Actress Meena Husband: நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்

மீனா - ரஜினிகாந்த்

மீனா - ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் மீனாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது கணவர் உடலுக்கு தனது அஞ்சலியை செலுத்தினார்.

    நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

    நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு 7 மணியளவில் காலமானார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தார். 48 வயதான வித்யாசாகர் முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருந்தார்.

    பின்னர், மார்ச் 2022-ன் இறுதியில், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனவே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் படிப்படியாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் நேற்று மாலை வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனால் திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்து சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதோடு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று வித்யாசாகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு - ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்...



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் மீனாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது கணவர் உடலுக்கு தனது அஞ்சலியை செலுத்தினார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, பின்னாட்களில் அவருக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress meena, Rajinikanth

    அடுத்த செய்தி