ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நவம்பரில் வாடகைத்தாய்.. ஆப்ரேஷனில் குழந்தை.. நயன்தாரா விவகாரத்தில் தேதி வாரியாக விவரம் சொன்ன அரசு!

நவம்பரில் வாடகைத்தாய்.. ஆப்ரேஷனில் குழந்தை.. நயன்தாரா விவகாரத்தில் தேதி வாரியாக விவரம் சொன்ன அரசு!

நயன் - விக்கி

நயன் - விக்கி

நயன் - விக்கி ஜோடிக்கு பதிவு திருமணம் நடைபெற்றது எப்போது, வாடகைத்தாய் ஒப்பந்தம்போடப்பட்டது எப்போது என்ற விவரத்தையெல்லாம் அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.

    இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூகவலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.

    வாடகை தாய் விவகாரம்: நயன்தாரா விதி மீறவில்லை - தமிழ்நாடு அரசு தகவல்

    இந்நிலையில் வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.

    இந்த குழுவின் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில், செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'ஆவணங்கள் இல்லை... ஹாஸ்பிடலுக்கு நோட்டீஸ்?' நயன்தாரா வாடகைத்தாய் விவகாரத்தில் சிக்கும் மருத்துவமனை!

    குறிப்பாக பதிவு திருமணம் நடைபெற்றது எப்போது, வாடகைத்தாய் ஒப்பந்தம்போடப்பட்டது எப்போது என்ற விவரத்தையெல்லாம் அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதில், ''11.3.2016ல் இந்த தம்பதியருக்கு பதிவு திருமணம் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. திருமண பதிவு உண்மைத் தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2020 மாதத்தில் சினை முட்டை மற்றும் விந்தணு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு, நவம்பர் 2021 மாதத்தில் வாடகத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. மார்ச் 2022 இல் கருமுட்டைகள் வாடகை தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு அக்டோபர் மாதம் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன. கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டைக் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் 9 அக்டோபர் அன்று தம்பதியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளனர்


    Published by:Murugadoss C
    First published:

    Tags: Director vignesh shivan, Nayanthara