ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விசாரணைக்குள் வராத குடும்ப மருத்துவர் - நயன்தாரா வாடகைத்தாய் விவகாரத்தில் அரசு சொன்ன ரீசன்ஸ்

விசாரணைக்குள் வராத குடும்ப மருத்துவர் - நயன்தாரா வாடகைத்தாய் விவகாரத்தில் அரசு சொன்ன ரீசன்ஸ்

நயன் - விக்கி

நயன் - விக்கி

நயன்தாரா இரட்டைக்குழந்தை விவகார விசாரணையில் குடும்ப மருத்துவரை விசாரிக்கவில்லை என அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.

  இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூகவலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.

  வாடகை தாய் விவகாரம்: நயன்தாரா விதி மீறவில்லை - தமிழ்நாடு அரசு தகவல்

  இந்நிலையில் வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.

  இந்த குழுவின் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில், செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  'ஆவணங்கள் இல்லை... ஹாஸ்பிடலுக்கு நோட்டீஸ்?' நயன்தாரா வாடகைத்தாய் விவகாரத்தில் சிக்கும் மருத்துவமனை!

  குறிப்பாக இந்த விசாரணையில் குடும்ப மருத்துவரை விசாரிக்கவில்லை என அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது அதற்கான விளக்கமாக, ''தனியார் மருத்துவமனையில் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், 2020ல் அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார். குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை செய்த போது இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அத்த தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை மேலும் விசாரணையில் மருத்துவர் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் தெரிய வருவதால் அக்குடும்ப மருத்துவரிடம் குழுவி விசாரணை மேற்கொள்ளவில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளது


  Published by:Murugadoss C
  First published:

  Tags: Director vignesh shivan, Nayanthara