கமல்ஹாசன் கொடுத்த பரிசு...! அமெரிக்க நடிகை பெருமிதம்

கமல்ஹாசன் பற்றிய மெக்கன்ஸியின் பதிவுக்கு கமல் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

கமல்ஹாசன் கொடுத்த பரிசு...! அமெரிக்க நடிகை பெருமிதம்
கமல்ஹாசன் உடன் மெக்கன்ஸி வெஸ்ட்மோர்
  • Share this:
அமெரிக்க நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர் கமல்ஹாசன் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

ஹாலிவுட் படங்களில் ஒப்பனையாளராக பணியாற்றிய வெஸ்ட்மோர், தசாவதாரம், அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசனுடன் பணியாற்றியுள்ளார்.

வெஸ்ட்மோரின் மகள் மெக்கன்ஸி வெஸ்ட்மோர் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார். இவர் தனது ட்விட்டர் பதிவில், எனக்கு கமல்ஹாசனைத் தெரியுமா என்று பலர் கேட்கின்றனர். நான் சிறிய பெண்ணாக இருந்த போது கமல்ஹாசனின் பல கதாபாத்திரங்களுக்கு என் தந்தை மேக்கப் செய்துள்ளார். கடைசியாக அவரை சந்தித்து சில வருடங்களாகிவிட்டன.


2-வது புகைப்படத்தில் நானும் எனது அப்பாவும் கமல்ஹாசன் பரிசளித்த இந்திய உடைகளை அணிந்துள்ளோம் என்று கூறியுள்ளார். கமல்ஹாசன் பற்றிய மெக்கன்ஸியின் பதிவுக்கு கமல் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.



43 வயதாகும் மெக்கன்ஸி ஃபேஸ் ஆஃப், மிஸ் மேட்ச், ஃபேஷன்ஸ், ஆல் மை சில்ட்ரன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading