தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரியன்று எதிர்பாராதவிமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் அவரது மறைவு தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவத் தொடங்கின. இந்த நிலையில் அவரது மகன்கள் அன்பு மற்றும் யுவன் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மயில்சாமியின் மகன் அன்பு பேசியதாவது, கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு நான் அப்பா உள்ளிட்டோர் சென்றோம். இரவு நிகழ்ச்சி முடிந்தபிறகு நள்ளிரவு 2.30 மணியளவில் வீட்டுக்கு வரும் வழியில் பேசிக்கொண்டே வந்தோம். வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்தோம். நான் படுக்க சென்ற பிறகு அம்மா என்னை அழைத்து அப்பாவிற்கு மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறினார்.
உடனடியாக கார் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இருந்தபோதும் எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என நினைத்தேன். உடனடியாக போரூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கும் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
தர்மம் எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் எம்ஜிஆர் இருக்கிறார் என அப்பா சொல்வார். நாங்கள் தர்மம் எங்கிருக்கிறதோ அங்கே எம்ஜிஆர், விவேக், அப்பா ஆகியோர் உள்ளனர் என்கிறோம்.
குடிப்பேன் என அவர் சொன்னாலும் அவர் வெளியிடத்தில் குடித்ததாக யாரும் பார்க்க முடியாது. அப்பா குடிப்பதை நிறுத்திவிட்டார். அப்பாவுடைய மொபைல் எண்ணை அனைத்து வைக்க மாட்டோம். எப்பொழுதும் அந்த எண்ணிற்கு அழைக்கலாம். சில யூடியூப் சேனல்கள் அப்பா குறித்து தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். இதுபோல தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mayilsamy