விஜய்யுடன் தோனி இருக்கும் புகைப்படத்துடன் வாழ்த்து பதிவிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் மேத்யூ ஹெய்டன்

விஜய்யுடன் தோனி இருக்கும் புகைப்படத்துடன் வாழ்த்து பதிவிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
சிஎஸ்கே அணியுடன் விஜய்
  • Share this:
கிரிக்கெட் அரங்கின் "கூல்" என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி பிறந்த தினம் இன்று (ஜூலை 7). ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தோனிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. இதையடுத்து தோனிக்கு வாழ்த்து சொல்லி உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

தோனியுடன் பயணித்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரும், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான டுவைன் பிராவோ தோனிக்கு பிறந்தநாள் பரிசாக பாடல் ஒன்றை பாடியுள்ளார். ‘Number 7’ என தோனியின் ஜெர்சி நம்பரை குறித்து பதிவிட்டுள்ள அந்த பாடலில், தோனி பிறந்த இடம் தொடங்கி, மூன்று வித கோப்பையையும் கைப்பற்றிய வரலாறு வரை அனைத்தையும் நினைவு கூர்ந்து பாடியிருந்தார். மேலும் தோனி தனக்கு சகோதரன் எனவும் பிராவோ உணர்ச்சி பொங்க கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரரமுான மேத்யூ ஹெய்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மேத்யூ ஹெய்டனும் இடம் பெற்றிருக்கிறார். அவரது வாழ்த்து பதிவில், இந்த புகைப்படம் தனக்கு மிகவும் பிடித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


கிரிக்கெட் வர்ணனையாளரான பாவனா, குட்டி ஸ்டோரி பாடலின் தோனி வெர்ஷனை வெளியிட்டு அசத்தியுள்ளார். பாடலின் வரிகள் தோனியின் சாதனைகளை பேசியுள்ளன. இந்தப் பாடல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading