வெறுப்பை பரப்ப வேண்டாம்.... விஜய்யின் குட்டிக்கதை பாடலில் அரசியல்?

வெறுப்பை பரப்ப வேண்டாம்.... விஜய்யின் குட்டிக்கதை பாடலில் அரசியல்?
மாஸ்டர்
  • News18 Tamil
  • Last Updated: February 15, 2020, 11:54 AM IST
  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு குட்டி கதை என தொடங்கும் வெளியானது.  இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார்.

அனிமேஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள பாடலில் அனிமேசன் காட்சிகளில்  Dont  be the person spreading hatred என்ற வாசகத்துடன் தலையில் காவி நிற தலையுடன் மேடையில் ஒருவர் பேசுவது போலவும், கூட்டத்தில் இருப்பவர்கள  காவி உடையுடன் இருப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

நடிகர் விஜய் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் மத்தியில்   கதை சொல்வது வழக்கம் அதனை மனதில் வைத்து ஒரு குட்டிக்கதை என்ற வரிகளுடன் பாடல் இடம்பெற்றுள்ளது.


வெறுப்பை பரப்ப வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய காட்சிகளை இடம்பெற செய்ததன் மூலம் விஜய் யாருக்கேனும் அரசியல்  அறிவுரை வழங்க விழைகிறாரா என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. 
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்