அரசியல் ராப் பாடகர் வரிகளில் வெளியான ‘வாத்தி ரெய்டு’... மாஸ்டர் 3-வது பாடல் ரிலீஸ்

அரசியல் ராப் பாடகர் வரிகளில் வெளியான ‘வாத்தி ரெய்டு’... மாஸ்டர் 3-வது பாடல் ரிலீஸ்
விஜய்
  • Share this:
‘மாஸ்டர்’  திரைப்படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நாளை இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு ‘வாத்தி ரெய்டு’ என்ற படத்தின் 3-வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை அரசியல் ராப் பாடகர் அறிவு எழுதி பாடியுள்ளார்.


ஏற்கெனவே குட்டி ஸ்டோரி உள்ளிட்ட இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், இந்தப் பாடலும் ரசிகர்களைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடலில் இடம்பெற்றுள்ள ‘மேல ஏத்தி விட்டு பாத்துறாத வேற சைடு’ என்ற வரி விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறையினரின் சோதனையை நினைவுபடுத்தவும் தவறவில்லை.

First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading