கெத்து காட்டும் விஜய்சேதுபதி - மாஸ்டர் பட பாடல் ரிலீஸ்

  • Share this:
மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பொளக்கட்டும் பற பற’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கைதி படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆன்ட்ரியா, சாந்தனு, கௌரி கிஷான் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு பணிகள், பாடல் வெளியீட்டு விழா முடிவடைந்திருக்கும் நிலையில் ஏப்ரல் 9-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சத்தின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த திரைத்துறையும் முடங்கியுள்ளது. இதனால் குறித்த தேதியில் படம் திரைக்கு வருமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இந்நிலையில் கொரோனா காலத்தில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பொளக்கட்டும் பற பற' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் விஷ்ணு வரிகளில் சந்தோஷ் நாராயணன் இந்தப் பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

First published: April 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading