Home /News /entertainment /

‘மாஸ்டர்’ டீசரை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த லோகேஷ் கனகராஜ்

‘மாஸ்டர்’ டீசரை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த லோகேஷ் கனகராஜ்

சாந்தனு, லோகேஷ் கனகராஜ், அர்ஜூன் தாஸ்,

சாந்தனு, லோகேஷ் கனகராஜ், அர்ஜூன் தாஸ்,

‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசரை லோகேஷ் கனகராஜ், சாந்தனு உள்ளிட்டோர் ரசிகர்களுடன் ரசிகராக பார்த்து ரசித்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’.அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

இந்நிலையில் படம் குறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தீபாவளிக்கு டீசர் வெளியாகும் என்ற நல்ல செய்தியை சொன்ன படக்குழு தற்போது டீசரை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்திருக்கும் ரசிகர்கள் டீசர் வெளியாவதற்கு முன்பே #mastarteaser என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

சமூகவலைதள கொண்டாட்டங்கள் ஒருபுறமிருக்க சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அர்ஜூன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் டீசரைப் பார்த்து ரசித்தனர்.

டீசரில் விஜய் ஜேடி என்ற பேராசியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் விஜய் படத்துக்கே உரித்தான ஸ்டைலான அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. விஜய் சேதுபதியுடன் நேருக்கு நேர் விஜய் மோதுவது போன்ற காட்சியுடன் டீசர் நிறைவடைந்திருப்பதால் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.



அந்த வாத்திக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்துச்சு, அந்த வாத்தி ஒரு மாதிரி மண்டையில ஓடிட்டே இருக்கான் என விஜய் சேதுபதி பேசும் இரண்டு வசனங்கள் டீசரில் இடம்பெற்றிருந்தாலும், விஜய் பேசும் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை. கைதி, கமலின் விக்ரம் பட டீசரில் கறி சோறு இடம்பெற்றிருந்த நிலையில் மாஸ்டர் டீசரில் அப்படி ஒரு சீனை வைக்கவில்லையா என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

நவம்பர் 10-ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் திரைக்கு வர வாய்ப்பிருக்கிறது என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor vijay, Master

அடுத்த செய்தி