‘மாஸ்டர்’ குழு கொடுத்த பிறந்தநாள் ட்ரீட் - அனிருத் மகிழ்ச்சி

‘மாஸ்டர்’ படக்குழு தனது பிறந்தநாளுக்காக கொடுத்த ட்ரீட்டைப் பார்த்து இசையமைப்பாளர் அனிருத் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

‘மாஸ்டர்’ குழு கொடுத்த பிறந்தநாள் ட்ரீட் - அனிருத் மகிழ்ச்சி
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா மேடையில் விஜய் உடன் அனிருத்
  • Share this:
‘மாஸ்டர்’ படக்குழு தனது பிறந்தநாளுக்காக கொடுத்த ட்ரீட்டைப் பார்த்து இசையமைப்பாளர் அனிருத் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போயுள்ளது.

அக்டோபர் 15-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் திரையரங்குகள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் ‘மாஸ்டர்’ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இதனிடையே பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டால் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

மேலும் படிக்க: உணர்வுகளை புரிந்து கொண்டால் விஜய் சேதுபதியின் எதிர்காலத்திற்கு நல்லது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

இந்நிலையில் இன்று மாஸ்டர் பட இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு 'Quit Pannuda' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அனிருத்.‘மாஸ்டர்’ படக்குழுவின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading