காதலர் தினத்தன்று ஃபர்ஸ்ட் சிங்கிள்! மாஸ்டர் படத்தின் அசத்தல் அப்டேட்

காதலர் தினத்தன்று ஃபர்ஸ்ட் சிங்கிள்! மாஸ்டர் படத்தின் அசத்தல் அப்டேட்
மாஸ்டர்
  • Share this:
காதலர் தினத்தன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். முன்னதாக படத்தின் முதல் லுக், இரண்டாவது லுக், மூன்றாவது லுக் என்று முன்று போஸ்டர்களை பட நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. இந்தப் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் கடந்த சில தினங்களாக நெய்வேலி நிலகரி சுரங்கத்தில் எடுக்கப்பட்டன.

இதற்கிடையில், நெய்வேலியில் சூட்டிங்கில் இருந்த விஜயை கட்டாயமாக அழைத்துச் சென்று வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், நெய்வேலியில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று பா.ஜ.கவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் நெய்வேலியில் குவிந்தனர். அதனால், மாஸ்டர் படமும் விஜயும் பேசுபொருளாயினர். இந்தநிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.


அதன்படி, ’ஒரு குட்டி கதை சொல்லட்டுமா?’ எனும் பாடல் காதலர் தினத்தன்று மாலை ஐந்து மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதனால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.



Also see:


 
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்