ஊரடங்கு நாட்கள் - பால் கறக்கும் பணியில் மாஸ்டர் பட நடிகர்

ஊரடங்கு நாட்கள் - பால் கறக்கும் பணியில் மாஸ்டர் பட நடிகர்
மாஸ்டர் பட நடிகர்
  • Share this:
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நடிகர் தீனா தனது வீட்டில் உள்ள மாடுகளிடம் பால் கறக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் 4067 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 291 பேர் குணமடைந்துள்ளனர். 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்தக் கொடிய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முழுவீச்சில் இறங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவ வேண்டும். வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.


வீடுகளில் முடங்கியிருக்கும் பலர் சமூகவலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வரும் நிலையில், நடிகர், நடிகைகளும் தங்களது ரசிகர்களுக்கு வீடியோக்களை அள்ளி வீசி வருகின்றனர்.

அந்தவகையில் விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது விஜய் உடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள தீனா, தனது வீட்டில் உள்ள பசுமாட்டிடம் பால் கறப்பதை வீடியோவாக்கி, “வீட்டில் வேலைபார்த்து எத்தனை நாள் ஆச்சு” என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.


 
View this post on Instagram
 

Veetla velai Pathu Evalo nal achu.. @vijaytelevision


A post shared by Dheena (@dheena_offl) on


மேலும் படிக்க: ரஜினிகாந்த், அமிதாப் நடிக்கும் கொரோனா வைரஸ் குறும்படம்First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading