Master Mahendran: ஜூனியர் பவானியை வாழ்த்திய சீனியர் பவானி!

Master Mahendran: ஜூனியர் பவானியை வாழ்த்திய சீனியர் பவானி!

விஜய் சேதுபதியுடன் மாஸ்டர் மகேந்திரன்

மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக நடித்த மகேந்திரன், பெரிய பவானி விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்.

  • Share this:
    மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக நடித்த மகேந்திரன், பெரிய பவானி விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்.

    இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு கதாநாயகனாக உயர்ந்தார்.

    பொங்கலுக்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில், மகேந்திரன் இறுதியாக நடித்திருந்தார். மாஸ்டர் வில்லன் விஜய் சேதுபதியின் இளம் வயது நபர் குட்டி பவானியாக அவர் அதில் நடித்திருந்தார். படம் மாபெரும் வெற்றி பெற்று மாஸ்டர் படத்தில் நடித்த அனைவருக்கும் பாராட்டுகளைப் பெற்று தந்தது.



    இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் வாங்கினார் மகேந்திரன். அதனை மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கையால் வாங்கி, அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். தற்போது அந்த காருடன் நடிகர் விஜய் சேதுபதியை, அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் மகேந்திரன். அந்த காரை ஓட்டிப் பார்த்த விஜய் சேதுபதி, அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

    அப்போது விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்த மகேந்திரன், ‘என்னோட பவானி... விஜய் சேதுபதி அண்ணா’ எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: