Home /News /entertainment /

விரைவில் தொடங்கவிருக்கும் மாஸ்டர் இந்தி ரீமேக்!

விரைவில் தொடங்கவிருக்கும் மாஸ்டர் இந்தி ரீமேக்!

மாஸ்டர்

மாஸ்டர்

இந்த வருடம் மார்ச் மாதத்தில் மாஸ்டர் இந்தி ரீமேக்கை தொடங்க திட்டமிட்டிருப்பதாக மும்பையிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

விஜய் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

2021 பொங்கலுக்கு மாஸ்டர் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் நாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர். விஜய் கல்லூரி பேராசிரியர் வேடத்தில் நடித்திருந்தார்.

படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் பட்டையை கிளப்பியது. மாஸ்டர் உலக அளவில் 250 கோடிகளை படம் வசூலித்ததாக சொல்லப்பட்டது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் இந்தப் படத்தை 'டப்' செய்து வெளியிட்டனர். இந்தியில் இரண்டு கோடி வசூலையும் படம் எட்டவில்லை. அதேநேரம் இந்தியில் மாஸ்டர் ரீமேக் செய்யப்படுவதாக சொல்லப்பட்டது.

விஜய் நடித்த வேடத்தில் சல்மான் கானும், விஜய் சேதுபதியின் வில்லன் வேடத்தில் ஷாகித் கபூர் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், ஒருகட்டத்தில் மாஸ்டர் கதையில் திருப்தி இல்லாமல் மாஸ்டர் ரீமேக்கிலிருந்து சல்மான் கான்  விலகிக் கொண்டார். இதனால் இந்தி ரீமேக் கைவிடப்பட்டதாகவே கருதப்பட்டது.

இந்நிலையில், இந்த வருடம் மார்ச் மாதத்தில் மாஸ்டர் இந்தி ரீமேக்கை தொடங்க திட்டமிட்டிருப்பதாக மும்பையிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. முன்னணி நடிகர்கள் இரண்டு பேர் இதில் நடிக்க உள்ளனர். அவர்கள் யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர். அதேபோல் இந்தி ரீமேக்கை இயக்குகிறவர் யார் என்பதையும் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற விஜய் சேதுபதியின் இன்னொரு படமான விக்ரம் வேதா ரித்திக் ரோஷன், சயிப் அலிகான் நடிப்பில் இந்தியில் தயாராகி வருகிறது. செப்டம்பர் 30-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Thalapathy vijay

அடுத்த செய்தி