முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Master Hindi Remake: இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர்! ஹீரோ இவர் தான்!

Master Hindi Remake: இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர்! ஹீரோ இவர் தான்!

மாஸ்டர் பட ஸ்டில்

மாஸ்டர் பட ஸ்டில்

வான்டட், பாடிகார்ட், கிக் என சல்மான் கானின் திரை வாழ்க்கையில் வெற்றி பெற்ற பல படங்கள் தென்னிந்திய படங்களின் ரீமேக்குகளே.

  • Last Updated :

விஜய் நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். கொரோனா முதல் அலைக்குப் பின் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வர தயங்கிய காலகட்டத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்ற படம். இதனை இந்தியில் ரீமேக் செய்ய சல்மான் கான் திட்டமிட்டுள்ளார்.

சல்மான் கான் நடிப்பில் ரமலான் பண்டிகைக்கு ராதே - யுவர் மோஸ்ட் வான்டட் பாய் வெளியானது. பிரபுதேவா இயக்கிய இப்படம் நேரடியாக ஓடிடி மற்றும் டிடிஹெச் இல் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியானது. யுஎஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என சில நாடுகளில் திரையரங்குகளிலும் வெளியானது.

படத்துக்கு முதல் நாளில் இருந்த வரவேற்பு அடுத்தடுத்த நாட்களில் இல்லை. ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் படம் ஏமாற்றியது. நல்ல கதாசிரியர் இங்கே இல்லை என சல்மான் கானின் தந்தை குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு படம் மோசமான கதையை கொண்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த தோல்வியிலிருந்து மீள மீண்டும் ரீமேக் படத்தில் நடிப்பது என சல்மான் முடிவு செய்துள்ளார். வான்டட், பாடிகார்ட், கிக் என சல்மான் கானின் திரை வாழ்க்கையில் வெற்றி பெற்ற பல படங்கள் தென்னிந்திய படங்களின் ரீமேக்குகளே. அதனால், தற்போதைய தோல்வியிலிருந்து மீள மீண்டும் ரீமேக்கை நாடியுள்ளார். இப்போது அவரது தேர்வு, விஜய் நடித்த மாஸ்டர்.

சிறுவர் சீர்த்திருத்த பள்ளி மாணவர்களை கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் கதைக்கரு சல்மானுக்கு பிடித்திருப்பதாகவும், அவரது அடுத்த படம் மாஸ்டர் ரீமேக்காக இருக்கும் எனவும் பாலிவுட் தகவல்கள் கூறுகின்றன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளிவரலாம்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Actor Vijay, Salman khan