'பான் இந்தியா' படமாக வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்...!

"நடிகர் விஜய் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அவரது படங்கள் எதுவும் பான் இந்தியா படமாக வெளியானதில்லை"

'பான் இந்தியா' படமாக வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்...!
மாஸ்டர் பட போஸ்டர்
  • Share this:
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இந்தியா முழுக்க வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆன்ட்ரியா, சாந்தனு, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இத்திரைப்படத்தை இன்று (ஏப்ரல் 9) வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் படத்தை குறித்த தேதியில் ரிலீஸ் செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து வரும் ஜூன் மாதம் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக ஐநாக்ஸ் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அவரது படங்கள் எதுவும் பான் இந்தியா படமாக வெளியானதில்லை. அந்தக் குறையைப் போக்கவுள்ளது மாஸ்டர்.




 
First published: April 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading