இன்னைக்கு தரமான குட்டிக் கதை இருக்கு...! ‘மாஸ்டர்’ பிரபலம் தகவல்

இன்னைக்கு தரமான குட்டிக் கதை இருக்கு...!  ‘மாஸ்டர்’ பிரபலம் தகவல்
விஜய்
  • Share this:
மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் தரமான குட்டிக் கதை இருக்கிறது என்று மாஸ்டர் படத்தில் நடித்த சாந்தனு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தனது படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் விஜய், குட்டிக் கதை சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், பூக்கடையில் வேலை செய்யும் ஒருவரை பட்டாசு கடையில் உட்கார வைத்தால் என்னவாகும் என்று கதை மூலம் விளக்கினார். மேலும் அந்தக் கதையின் இறுதியில், யாரை எங்க உட்கார வைக்கனுமோ அவங்கள அங்க தான் உட்கார வைக்கனும் என்று சொல்லி முடித்தார்.

நடிகர் விஜய்யின் இந்த பேச்சு நேரடியாக அரசியலில் உள்ளவர்களை தாக்குவதாக இருந்தது என ஆளும்கட்சி தரப்பினர் கூறினர். இதையடுத்து அவர் இன்று மாலை நடைபெற இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. எனவே அவரது பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் திரைப்பட நட்சத்திரங்களே தங்களது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


இந்நிலையில் மாஸ்டர் இசைவெளியீட்டு விழா குறித்து ட்வீட் செய்திருக்கும் நடிகர் சாந்தனு, “இன்னைக்கு தரமான குட்டிக் கதை இருக்கு” என்று கூறியுள்ளார்.

இன்று நடிகர் விஜய் சொல்லும் குட்டிக் கதையில் அரசியல் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.First published: March 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading