மாஸ்டர் இசைவெளியீட்டு விழா நடந்த இடத்தில் விஜய் ரசிகர்கள் ரகளை

மாஸ்டர் இசைவெளியீட்டு விழா நடந்த இடத்தில் விஜய் ரசிகர்கள் ரகளை
விஜய்
  • Share this:
சென்னையில் மாஸ்டர் திரைப்பட இசைவெளியீட்டு விழா நடைபெற்ற நட்சத்திர விடுதி முன்பு விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் விஜயை காண அவரது ரசிகர்கள் விடுதியின் முன் திரண்டனர்.

அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டும் விழா நடைபெறும் அரங்கத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், தங்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் எனக்கோரி கோஷமிட்டனர்.


ஒரு கட்டத்தில் அங்குள்ள தடுப்புகளை உடைத்து கொண்டு வரவேற்பறை முன் தர்ணாவிலும் ஈடுபட்டனர். ரசிகர்களை சமாளிக்க முடியாமல் விடுதி ஊழியர்கள் திணறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் அனிருத் இசையில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை ஏப்ரல் 9-ம் தேதிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

Also see:

 
First published: March 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading