விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் 50-வது நாளைக் கடந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
தமிழ் திரையுலகம் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மந்தநிலையில் இருந்தது. ஆனால் பொங்கலுக்கு வெளியான 'மாஸ்டர்' அந்த நிலையை மாற்றியிருக்கிறது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் செய்த மந்திரம் பார்வையாளர்களை திரையரங்குகளை நோக்கி படையெடுக்க வைத்தது. முன்னதாக திரையரங்குகளில் ஐம்பது சதவிகித ஆக்கிரமிப்பு இருந்தபோதிலும் மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று, திரையுலகிற்கு நம்பிக்கை அளித்துள்ளது.
Master 50th Day: மாற்று திறனாளி குழந்தைகளுக்கு இலவச டிக்கெட் – மாஸ்டர் 50-வது நாள் கொண்டாட்டம்!
'மாஸ்டர்' இன்று தியேட்டர்களில் 50 நாளைக் கடந்துள்ளது. இந்த வெற்றிக்கு தனது ஹீரோ மற்றும் வில்லன் உட்பட அனைவருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார். அதோடு விஜய், விஜய் சேதுபதி இருவரின் பார்த்தீராத வீடியோவையும் ரசிகர்களுக்கு பரிசளித்துள்ளார். மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட அந்த வீடியோ விஜய் - விஜய் சேதுபதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
திரையரங்கில் வெளியான 16-வது நாளில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிடப்பட்டாலும், திரையரங்கில் மாஸ்டருக்கு கிடைத்த வரவேற்பில் கொஞ்சமும் குறைவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதியுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், கெளரி கிஷன் உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். அனிருத் இசையமைத்திருந்த மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் தெறி ஹிட்!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்