முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மறுவெளியீட்டில் புதிய வரலாறு படைத்த பாபா... வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய ரஜினி

மறுவெளியீட்டில் புதிய வரலாறு படைத்த பாபா... வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய ரஜினி

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் ரஜினிகாந்த்

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் ரஜினிகாந்த்

பாபா படம் மறுவெளியீட்டில் மாபெரும் வெற்றியைப் பெற்றதாகவும், மறு வெளியீட்டுப் படங்களிலேயே அதிக வசூலித்த படமாக பாபா வரலாறு படத்ததகாகவும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அண்ணாமலை, வீரா, பாட்ஷா என தொடர் வெற்றிகளுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூட்டணி இணைந்த பாபா திரைப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் அந்த நேரத்தில் விநியோகிஸ்தர்களுக்கு இந்தப் படம் நஸ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு பாபா படம் மறு வெளியீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பாபா படம் மறுவெளியீட்டில் மாபெரும் வெற்றியைப் பெற்றதாகவும், மறு வெளியீட்டுப் படங்களிலேயே அதிக வசூலித்த படமாக பாபா வரலாறு படத்ததகாகவும் கூறப்படுகிறது.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நினைவு பரிசினை வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட படங்களை ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்துவருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் 70 சதவிகிதம் படமாக்கப்பட்டுவிட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருக்கின்றன. பான் இந்தியன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

First published: