அவதார் வசூல் சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ்!

இந்தப் படத்தை மாபெறும் பெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என்று டிஸ்னி ஸ்டூடியோஸ் துணை தலைவர் ஆலன் ஹார்ன் கூறியுள்ளார்

news18
Updated: July 30, 2019, 1:59 PM IST
அவதார் வசூல் சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ்!
அவதார்
news18
Updated: July 30, 2019, 1:59 PM IST
அவதார் படத்தின் வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் படம் முறியடித்துள்ளது.

அவெஞ்சர்ஸ் படத்தின் கடைசி பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்தது.

தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் அவதார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தை பிடித்ததாக மார்வல் நிறுவனத்தின் தலைவர் கெவின் பிச் கூறியுள்ளார்.
இதேபோல் டிஸ்னி ஸ்டூடியோஸ் துணை தலைவர் ஆலன் ஹார்ன், ‘மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். இந்தப் படத்தை மாபெறும் வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவதார் படம் முதலில் ரிலீசான போது 2.749 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்திருந்தது. பின்னர் மீண்டும் 2010-ம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்த போது 33 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்தது. மொத்தமாக 2.789.7 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடத்தில் இருந்து வந்தது.

Loading...தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் வெள்ளிக்கிழமையோடு 2.789.2 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து 500,000 அமெரிக்க டாலர் வசூல் பின் தங்கியிருந்தது. இந்நிலையில், தற்போது அவதார் வசூலை  அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also watch

First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...