மார்வெல் ஸ்டுடீயோஸ்-ன் அடுத்தப் படம் என்ன? 2 ஆண்டுகளுக்கான பட்டியல் வெளியீடு

முதன்முறையாக ஆசியாவைச் சேர்ந்த முன்னணி கதாநாயகன் ஒருவரை வைத்து சாங்-சி மற்றும் லெஜெண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ் ஆகிய திரைப்படங்களை 2021-ம் ஆண்டு வெளியிடுகிறது மார்வெல்.

Web Desk | news18
Updated: July 22, 2019, 12:03 PM IST
மார்வெல் ஸ்டுடீயோஸ்-ன் அடுத்தப் படம் என்ன? 2 ஆண்டுகளுக்கான பட்டியல் வெளியீடு
மார்வெல் திரைப்படங்கள்
Web Desk | news18
Updated: July 22, 2019, 12:03 PM IST
மார்வெல் ஸ்டுடியோஸ் சார்பில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வெளியாகும் திரைப்படங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மார்வெல் ஸ்டுடியோஸ் சார்பில் வெளியாகும் படங்கள் சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் திரைப்படம் வசூல் வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தின் வசூல், அவதார் திரைப்படத்தின் வசூலை முந்தி சாதனை படைத்துள்ளது.

இந்த வரிசையில் மார்வெல் ஸ்டுடியோஸ் சார்பில் அடுத்து என்ன திரைப்படம் வெளியாகும் என்ற கேள்விக்குப் பெரிய பட்டியலையே வெளியிட்டுள்ளது மார்வெல். சமீபத்தில் நடந்த ‘காமிக்-கான்’ திரைப்பட விழாவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகின. மார்வெல் நாயக, நாயகிகள் உடன் புதிதாக ஏஞ்சலினா ஜோலி, சல்மா ஹயக் மற்றும் ரேச்சல் வெய்ஸ் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் புதிதாக இணைவதாக அறிவிக்கப்பட்டது.


அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தோர், ப்ளாக் விடோ, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், லோகி ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளியாகின்றன. சீரிஸ் வரிசையில் ப்ளாக் பாந்தர், கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி, மற்றும் கேப்டன் மார்வெல் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

புதிதாக ‘தி இடர்னெல்ஸ்’ என்ற திரைப்படம் மார்வெல் திரைப்படங்கள் வரிசையில் இணைகிறது. நவம்பர் 2020-ம் ஆண்டு வெளியாகும் இத்திரைப்படத்தில் ஏஞ்சலினா ஜோலி மற்றும் சல்மா ஹயக் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முதன்முறையாக ஆசியாவைச் சேர்ந்த முன்னணி கதாநாயகன் ஒருவரை வைத்து சாங்-சி மற்றும் லெஜெண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ் ஆகிய திரைப்படங்களை 2021-ம் ஆண்டு வெளியிடுகிறது மார்வெல்.

Loading...

மேலும் பார்க்க: இன்று விற்பனைக்கு வருகிறது ரெட்மி K20, K20 ப்ரோ..! 
First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...