Home /News /entertainment /

மர்மயோகி - தமிழின் முதல் 'A' சான்றிதழ் பெற்ற திரைப்படம்!

மர்மயோகி - தமிழின் முதல் 'A' சான்றிதழ் பெற்ற திரைப்படம்!

மர்மயோகி

மர்மயோகி

மர்மயோகி, த்ரோன் ஆஃப் பிளட், மெக்பூல் என எல்லாமே அந்தந்த காலகட்டத்தில் ஆச்சரியத்தை அளித்தப் படங்கள்.

'ஏ' சான்றிதழ் ஒரு படத்துக்கு தரப்படுகிறது என்றால், 20 வருடங்களுக்கு முன் அதன் அர்த்தம், ஆபாசக் காட்சிகள் நிறைந்த படம் என்பதாகும். அப்போது வன்முறைக்காட்சிகள் தமிழ் சினிமாவில் அதிகம் இல்லை. அதாவது இப்போது வரும் ராக்கி போன்ற படங்களில் காட்டப்படுவது போன்ற வன்முறை. 'ஏ' சான்றிதழ் என்றால் ஒரேயொரு அர்த்தம்தான், படத்தில் ஆபாசக் காட்சிகள் இருக்கிறது.

ஆபாசம், வன்முறை எது அதிகமிருந்தாலும் 'ஏ' சான்றிதழ் வழங்கப்படும். 'ஏ' சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மன்மதலீலை போன்ற படங்களை எடுக்கிறார்கள். ஆபாசம், வன்முறை இரண்டும் அதிகம் இல்லாத 1951 இல் எதற்காக ஒரு படத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளித்தார்கள்? அதற்கான  காரணம் இன்றைய தேதியில் நகைப்புக்குரியது. அதை பிறகுப் பார்ப்போம். முதல்முதலில் தமிழில் 'ஏ' சான்றிதழ் வாங்கிய திரைப்படம் மர்மயோகி. எம்ஜிஆர் நடித்தது.

எம்ஜிஆரை நாயகனாக நிலைநிறுத்திய படம் 1947 இல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படத்தை ஏஎஸ்ஏ சாமி இயக்கியிருந்தார். அவரிடம் தன்னைச்சுற்றி கதை நடப்பது போல் ராபின்ஹுட் ஸ்டைலில் ஒரு படம் பண்ண வேண்ம் என்று எம்ஜிஆர் தொடர்ந்து கேட்க, சாமி எழுதிய கதைதான் மர்மயோகி. ஆங்கில நாவலாசிரியர் Marie Corelli எழுதிய வென்கியன்ஸ் நாவல், ராபின்ஹுட் பற்றிய சித்திரம், ஷேக்ஸ்பியரின் மெக்பத் நாடகம் அனைத்தையும் கலந்துகட்டி மர்மயோகியை அவர் எழுதினார்.

நடனக்காரியாக அரண்மனைக்குள் வரும் பெண் அரசரை மயக்கி, அவரை திருமணம் செய்து, ஒருகட்டத்தில் அரசரை கொன்று ராணியாக முடிசூடுகிறாள். காலம் ஓடுகிறது. அவளது ஆளுகைக்குள் கரிகாலன் என்ற இளைஞன் ராபின்ஹுட் போல மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறான். அதேநேரம், வீராங்கன் என்பவன் ராணியின் தளபதியாகிறான். அவன் கரிகாலனை மயக்க கலாவதி என்ற பெண்ணை அனுப்புகிறான். அவளோ கரிகாலனிடத்தில் காதல் கொள்கிறாள். கரிகாலனை ஒரு ஆவி வழிநடத்துகிறது. சிலபல சண்டைகளுக்குப் பிறகு, கரிகாலனை வழிநடத்தும் ஆவி இறந்து போனதாக கருதப்பட்ட அரசர் என்பது தெரிய வருகிறது. கரிகாலன்தான் அவரது மூத்த மகன். இளையவன் வீராங்கன். கலாவதி அரசரின் நம்பிக்கைக்குரிய தளபதியின் மகள். இறுதியில் ராணியின் சதிகள் அம்பலமாகி அவள் இறந்து போகிறாள். குடும்பம் ஒன்று சேர்கிறது.

Marmayogi - Tamil's first A certified film, marmayogi kamal, marmayogi kamal trailer, marmayogi meaning, marmayogi songs, marmayogi telugu movie, mgr triple action movies, naam old tamil movie, எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன், மர்மயோகி, மர்மயோகி திரைப்படம், மர்மயோகி ஏ சான்றிதழ்

கதையில் இத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும் எம்ஜிஆரின் நாயக பிம்பத்தை சுற்றியே இவை அனைத்தும் கோர்க்கப்பட்டிருந்தது. அவர் பேசுகிற, 'நான் குறி வைத்தால் தவற மாட்டேன். தவறுமேயானால் குறி வைக்க மாட்டேன்' வசனம் அப்போது பிரபலம். இந்த வசனம் வருகையில் ரசிகர்கள் விசிலடித்து மகிழ்ந்ததாக அப்போதைய விமர்சனங்களில் எழுதியுள்ளனர். மர்மயோகியில் கரிகாலனாக எம்ஜிஆரும், ராணியாக அஞ்சலி தேவியும், விராங்கனாக சகஸ்ரநாமமும், கலாவதியாக மாதுரிதேவியும் நடித்திருந்தனர்.  கரிகாலனின் தந்தை அரசராகவும், மர்மயோகியாகவும் செருகளத்தூர் சாமா நடித்திருந்தார். படத்தை ராம்நாத் இயக்க, ஜுபிடர் பிக்சர்ஸ் படத்தை தயாரித்தது. எம்ஜிஆரை நாயகனாக பிரமாண்டப்படுத்திய முக்கிய படமாக மர்மயோகி அமைந்தது.

குழந்தையை பெற்றெடுத்த காஜல் அகர்வால் - குவியும் வாழ்த்துகள்!

Marmayogi - Tamil's first A certified film, marmayogi kamal, marmayogi kamal trailer, marmayogi meaning, marmayogi songs, marmayogi telugu movie, mgr triple action movies, naam old tamil movie, எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன், மர்மயோகி, மர்மயோகி திரைப்படம், மர்மயோகி ஏ சான்றிதழ்

மர்மயோகியில் ஷேக்ஸ்பியரின் மெக்பத்தின் தாக்கம் அதிகமிருந்தது. இந்தப் படம் வெளியாகி ஆறு வருடங்கள் கழித்து (1957) அகிரா குரோசவா  மெக்பத் இன்ஸ்பிரேஷனில் த்ரோன் ஆஃப் பிளட் திரைப்படத்தை எடுத்தார். படம் உலக சினிமாவில் உன்னத இடத்தைப் பிடித்தது. இதே மெக்பத் இன்ஸ்பிரேஷனில் 2003 இல் விஷால் பரத்வாஜ் இந்தியில் மெக்பூல் திரைப்படத்தை எடுத்தார். இர்பான் கான், தபு பிரதான வேடங்களில் நடித்திருந்தனர். மர்மயோகியில் ராணியை அவ்வப்போது ஒரு பிசாசு கலவரப்படுத்தி, அவளது எதிர்காலத்தை முன்னறிவிக்கும். த்ரோன் ஆஃப் பிளட்டில் காட்டில் கண்ணுக்குத் தெரியாத சூனியக்காரிகள் எதிர்காலத்தை முன்னறிவிப்பார்கள். மெக்பூலில், இந்த வேடத்தை போலீசாக வரும் நஸ்ருதீன் ஷா, ஓம்பூரிக்கு விஷால் பரத்வாஜ் அளித்திருப்பார். ஓம்பூரி ஜோசியத்தில் பரிட்சயம் உள்ளவர். ஒருவரின் எதிர்காலம் எப்படி அமையும் என்று கணிப்பவர்.

கை, கால் வரல... பேசவும் முடியல... சின்னத்திரை பிரபலம் ப்ரீத்தா ராகவ் கண்ணீர்

Marmayogi - Tamil's first A certified film, marmayogi kamal, marmayogi kamal trailer, marmayogi meaning, marmayogi songs, marmayogi telugu movie, mgr triple action movies, naam old tamil movie, எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன், மர்மயோகி, மர்மயோகி திரைப்படம், மர்மயோகி ஏ சான்றிதழ்

மேக்பத்தை அடிப்படையாக வைத்து பல படங்கள் உலகம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ளன. மர்மயோகி, த்ரோன் ஆஃப் பிளட், மெக்பூல் என எல்லாமே அந்தந்த காலகட்டத்தில் ஆச்சரியத்தை அளித்தப் படங்கள். சரி, மர்மயோகிக்கு ஏன் 'ஏ' சான்றிதழ் அளித்தார்கள்? கரிகாலனுக்கு அறிவுரை கூறும் பேயாக அவரது தந்தை வருவார் அல்லவா. அதற்காகதான் 'ஏ' சான்றிதழ் தரப்பட்டது. இத்தனைக்கும் அவர் பேயல்ல. மனிதர்தான். பேய் போன்று நாடகமாடுவார். அதற்கே 'ஏ' சான்றிதழ் என்றால் இப்போது வரும் பேய்ப் படங்களுக்கு? யோசிக்கவே திகிலா இருக்கே!உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி