ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தி நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் மாரி செல்வராஜின் கர்ணன்!

தி நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் மாரி செல்வராஜின் கர்ணன்!

கர்ணன்

கர்ணன்

கர்ணனை தி நியூயார்க் டைம்ஸ் தற்போது ஓடிடியில் பார்க்கக் கிடைக்கும் சிறந்த ஐந்து படங்களுள் ஒன்றாக தேர்வு செய்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஓடிடியில் பார்க்கக் கிடைக்கும் சிறந்த ஐந்து திரைப்படங்களை தேர்வு செய்து மாதம்தோறும் வெளியிடும். இது சர்வதேச அளவிலான பட்டியல். இந்த மாதம் அவர்கள் தேர்வு செய்துள்ள ஐந்தில் ஒன்று மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படம்.

மாரி செல்வராஜின் கர்ணன் திரைப்படம் அது வெளியான போதே இந்திய அளவில் கவனம் பெற்றது. ஆனந்த் எல்.ராய் போன்ற இயக்குனர்கள் படத்தை பாராட்டியிருந்தனர். சர்வதேச அளவிலும் கர்ணன் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கர்ணனை தி நியூயார்க் டைம்ஸ் தற்போது ஓடிடியில் பார்க்கக் கிடைக்கும் சிறந்த ஐந்து படங்களுள் ஒன்றாக தேர்வு செய்துள்ளதுஅந்த ஐந்து படங்கள்....

The Father Who Moves Mountains (ருமானியா - நெட்பிளிக்ஸ்)

Koshien: Japan’s Field of Dreams (ஜப்பான் - அமேசான் பிரைம் வீடியோ)

I Never Climbed the Provincia (சிலி - அமேசான் பிரைம் வீடியோ)

Karnan (இந்தியா - அமேசான் பிரைம் வீடியோ)

The Cloud in Her Room (ஹாங்காங் - முபி)

Also read... மீண்டும் சந்தனத்தேவனை தூசிதட்டும் இயக்குனர் அமீர்...!

இந்த வருடம் முதல் காலாண்டில் வெளியான திரைப்படங்களில் சர்வதேச அளவில் சிறந்த 25 திரைப்படங்களின் பட்டியலை பிரபல இணையதளம் வெளியிட்டது.

இதில் ஐந்து இந்தியத் திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் மூன்று மலையாளப் படங்கள். இரண்டு தமிழ்ப் படங்கள். மண்டேலா மற்றும் கர்ணன். இப்போது கர்ணன் மேலும் ஒரு பெருமையை சொந்தமாக்கியிருக்கிறது

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Dhanush, Karnan, Mari selvaraj