மாரி செல்வராஜின் கர்ணன் திரைப்படம் ஃப்ராங்க்பர்டில் நடக்கும் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் இந்திய அளவில் பேசு பொருளானது. தமிழகம் தாண்டி பல மாநிலங்களில் கர்ணன் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியின் பிரபல இயக்குனர் ஆனந்த் எல்.ராய் படத்தையும், தனுஷின் நடிப்பையும் வியந்து பாராட்டினார். இதேபோல் பலர் படத்தை பாராட்டினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கர்ணன் விமர்சனரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாவும் சாதித்தது. திரையரங்குகளில் கர்ணனுக்கு பெருமளவு ரசிகர்கள் திரண்டனர். கொரோனா இரண்டாம் அலை காரணமாக அரசு ஊரடங்கு அறிவிக்காமல் இருந்திருந்தால், மேலும் சில வாரங்கள் கர்ணன் திரையரங்கில் ஓடியிருக்கும்.
ஓடிடியில் கர்ணன் வெளியானதும் சப் டைட்டில் உதவியுடன் இந்தியாவின் பிற மொழி ரசிகர்களையும் படம் சென்றடைந்தது. இந்தியின் வணிக சினிமாவையும், கர்ணனையும் ஒப்பிட்டு பல விமர்சனங்கள் எழுதப்பட்டன. இப்போது கர்ணன் சர்வதேச கவனத்தை பெறும் நேரம்.
Also read... ஆர்.ஜே.பாலாஜி, சூரரைப்போற்று அபர்ணா பாலமுரளியின் வீட்ல விசேஷங்க!
ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட்டில் நடைபெறும் நியூ ஜெனரேஷன் இன்டிபென்டன்ட் இன்டியன் ஃபிலிம் பெஸ்டிவலில் திரையிட கர்ணன் தேர்வாகியுள்ளது. இது மிகப்பெரிய கௌரவம். கர்ணனின் சர்வதேச அங்கீகரம் மேலும் தொடரட்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnan, Mari selvaraj