Home /News /entertainment /

பாடல் வரிகளால் ரஹ்மானுக்கு ஹேப்பி பர்த்டே சொன்ன மாரி செல்வராஜ்!

பாடல் வரிகளால் ரஹ்மானுக்கு ஹேப்பி பர்த்டே சொன்ன மாரி செல்வராஜ்!

ஏ.ஆர்.ரஹ்மானுடன் மாரி செல்வராஜ்

ஏ.ஆர்.ரஹ்மானுடன் மாரி செல்வராஜ்

ரஹ்மான் தமிழில் அதிகம் இசையமைப்பதில்லை என்ற குறை அவரது ரசிகர்களுக்கு எப்போதும் உண்டு. பிரமாண்ட படங்கள் மட்டுமின்றி கதைப்படங்களுக்கும் அவர் இசையமைக்க வேண்டும் என்பது இன்னொரு எதிர்பார்ப்பு.

  • News18
  • Last Updated :
ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று பிறந்தநாள். திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பிலிருந்தும் ரஹ்மானுக்கு வாழ்த்துகள் குவிந்தன.

இந்திப் பாடல்களில் லயித்திருந்த தமிழர்களின் காதுகளை தமிழ்ப் பாடல்களை நோக்கி திருப்பியதில் எம்எஸ்.வி, இளையராஜா பாடல்களுக்கு பெரும்பங்குண்டு. இளையராஜா இசையின் உச்சமாக கருதப்பட்ட காலத்தில் அவரைத்தாண்டி ஒருவர் வர வாய்ப்பியில்லை என்று நம்பியிருந்த நேரத்தில் ரஹ்மானின் வருகை அமைந்தது. இசையில் உச்சம் என்பது இல்லை, அது மாபெரும் சாகரம், இளையராஜா ஒரு இசை சாகரம் என்றால் ரஹ்மான் இன்னொரு சாகரம் என்ற புரிதலை அவரது வருகை உணர்த்தியது.

ரஹ்மான் தமிழில் அதிகம் இசையமைப்பதில்லை என்ற குறை அவரது ரசிகர்களுக்கு எப்போதும் உண்டு. பிரமாண்ட படங்கள் மட்டுமின்றி கதைப்படங்களுக்கும் அவர் இசையமைக்க வேண்டும் என்பது இன்னொரு எதிர்பார்ப்பு. அது இந்த வருடம் நிறைவேறப் போகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர். மாரி செல்வராஜின் முந்தைய இரு படங்கள் போன்று இதுவும் அரசியல் திரைப்படமாக உருவாகிறது.

Also read... சமந்தா, நயன்தாராவின் காத்துவாக்குல ரெண்டு காதல் புதிய படங்கள்!



ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு,

சந்தோஷக் கண்ணீரே

சந்தோஷக் கண்ணீரே

தேடித் தேடித் தேய்ந்தேனே

மீண்டும் கண்முன் கண்டேனே... என உயிரே படத்தின் பாடல் வரிகளை குறிப்பிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் மாரி செல்வராஜ். அத்துடன் ரஹ்மானுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: AR Rahman, Mari selvaraj

அடுத்த செய்தி