• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உதயநிதிக்காக துருவ் விக்ரம் படத்தை தள்ளிப்போடும் மாரி செல்வராஜ்?

உதயநிதிக்காக துருவ் விக்ரம் படத்தை தள்ளிப்போடும் மாரி செல்வராஜ்?

மாரிசெல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின்

மாரிசெல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி கே.எஸ்.அதியமான் இயக்கத்திலும், ஆர்டிகிள் 15 இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

  • Share this:
    கர்ணன் படத்தைத் தொடர்ந்து துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாக இருந்தது. இப்போது உதயநிதிக்காக அந்த புராஜெக்ட் தள்ளிப்போவதாக கோடம்பாக்கத்தில் பலமாக கிசுகிசுக்கப்படுகிறது.

    முதல் படம் பரியேறும் பெருமாளிலேயே கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். தமிழில் அரிதாக வெளிவரும் அரசியல் படங்களில் ஒன்றாக பரியேறும் பெருமாள் இருந்தது. இரண்டாவதாக இயக்கிய கர்ணணும் மோசமில்லை. தனுஷின் ஹீரோயிசத்துக்காக யதார்த்தத்தில் சிறிது காம்ப்ரமைஸ் செய்திருந்ததை தவிர்த்துப் பார்த்தால் கர்ணனும் முக்கியமான படமே.

    கர்ணனைத் தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு. இந்நிலையில், உதயநிதிக்காக ஒரு படம் மாரி செல்வராஜ் செய்வதாகவும், அதற்காக துருவ் விக்ரம் படத்தை தள்ளி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    உதயநிதி கே.எஸ்.அதியமான் இயக்கத்திலும், ஆர்டிகிள் 15 இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார். அரசியல் பணிகள் அதிகம் இருப்பதால் தற்காலிகமாக நடிப்புக்கு அவர் குட்பை செல்ல திட்டமிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மாரி செல்வராஜின் படத்துடன் நடிப்பை கைவிட அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. உதயநிதிக்காக பா.இரஞ்சித்தும் துருவ் விக்ரம் படத்தை தள்ளி வைக்க உடன்பட்டிருப்பதாக உள்வட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்து அறிவிப்பு வரலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: