முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாரி செல்வராஜின் படத்தில் கபடி வீரராக களமிறங்கும் துருவ் விக்ரம்

மாரி செல்வராஜின் படத்தில் கபடி வீரராக களமிறங்கும் துருவ் விக்ரம்

மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், பா.ரஞ்சித்

மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், பா.ரஞ்சித்

மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :

பரியேறும் பெருமாள் என்ற தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். இரண்டாவதாக அவர் இயக்கியிருக்கும் கர்ணன் திரைப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தாணு தயாரித்திருக்கும் கர்ணன் திரைப்படத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஹிட் அடித்திருந்த நிலையில் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வந்த கர்ணன் திரைப்படமும் மூன்று நாட்களில் ரூ.25 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருபக்கம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.

‘கர்ணன்’ படத்தை அடுத்து துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதல் இரண்டு படங்களிலிருந்து வித்தியாசப்படும் விதமாக கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி மாரி செல்வராஜ் தனது மூன்றாவது படத்தின் கதையை அமைத்துள்ளதாகவும் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

top videos

    துருவ் விக்ரம் தனது தந்தையுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சியான் 60’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக வாணி போஜனும் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரனும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தததும் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் துருவ் விக்ரம்.

    First published:

    Tags: Dhruv Vikram, Kollywood, Mari selvaraj