Home /News /entertainment /

மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு பிரபல நடிகர் மரணம்

மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு பிரபல நடிகர் மரணம்

அரவிந்த் தாணு

அரவிந்த் தாணு

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அரவிந்த் தாணு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

    மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக பிரபல மராத்தி நடிகர் அரவிந்த் தாணு உயிரிழந்துள்ளார். 

    பிரபல மராத்தி டிவி நிகழ்ச்சியான சுக் ம்ஹஞ்சே நக்கி கே அஸ்டா நடிகர் அரவிந்த் தாணுவின் திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 47. இவர் ஏக் ஹோதயா வால்யா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

    அவரது நடிப்பில் வந்த லகே மஜி லட்கி, சுக் மானே நக்கி கே அஸ்தா, கிரைம் போல் போன்ற தொடர்கள் வரவேற்பை பெற்று அரவிந்த் தாணுவை மராட்டிய ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. இதற்கிடையே மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் தாணு கலந்து கொண்டார். அப்போது மேடையிலேயே திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு ரத்த அழுத்தமும் அதிகமானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அரவிந்த் தாணு மரணம் அடைந்தார். அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அரவிந்த் மறைவுக்கு மராத்தி நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Shalini C
    First published:

    அடுத்த செய்தி