Home /News /entertainment /

முன்பதிவில் ரூ.100 கோடி வசூல் செய்த மோகன்லால் திரைப்படம்- படக்குழுவின் அசத்தும் விளம்பரம்

முன்பதிவில் ரூ.100 கோடி வசூல் செய்த மோகன்லால் திரைப்படம்- படக்குழுவின் அசத்தும் விளம்பரம்

மோகன்லால் படம்

மோகன்லால் படம்

மோகன்லாலின் மரைக்காயர் முன்பதிவின் மூலமே 100 கோடிகள் வசூலானதாக மலையாளப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளனர்.

மோகன்லால் நடித்துள்ள மரைக்யார் - அரபிக் கடலின்டெ சிம்ஹம் திரைப்படம் முன்பதிவில் 100 கோடிகளை உலக அளவில் வசூலித்துள்ளதாக விளம்பரம் செய்துள்ளனர்.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் தயாசூத்திருக்கும் மரைக்யார் திரைப்படம் டிசம்பர் 2 உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு படம் வெளியாகிறது. கோழிக்கோட்டில் வசித்த குஞ்சாலி மரைக்யார் வெள்ளையனுக்கு எதிராக கப்பல் படை திரட்டி போர் செய்தார் என்பது வரலாறு. அதனை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஓடிடி வெளியீடு என்று சொல்லி கடைசி நேரத்தில் பற்பல பஞ்சாயத்துக்கள் பேசி இப்போது திரைக்கு வருகிறது.

கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம், அதிக ரசிகர்கள் காட்சிகள், அதிக சிறப்புக் காட்சிகள், அதிக ஒருநாள் காட்சிகள், அதிக முன்பதிவு என அனைத்திலும் இப்படம் சாதனைப் படைத்துள்ளது. உலக அளவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் மலையாளப் படமும் இதுவே. ஐந்து மொழிகளில் 4,100 திரையரங்குகளில் படம் வெளியாவதாக அறிவித்துள்ளனர். முதல்நாள் காட்சிகள் மட்டும் உலக அளவில் 1,600.

மேலும் படிக்க - தனுஷ் நடிக்க வேண்டிய கதையில் சிவகார்த்திகேயன்?

இந்தப் படத்தின் முன்பதிவின் மூலமே 100 கோடிகள் வசூலானதாக மலையாளப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளனர். இப்படியொரு சாதனையை செய்த முதல் இந்தியப் படம் இது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையாக இருந்தால் நிச்சயம் பெரிய சாதனைதான்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Mohanlal

அடுத்த செய்தி