முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தியேட்டரில்தான் ஜனநாயகம்.. ஓடிடி பிரச்னைகளை வெளிப்படையாக பேசிய பா. ரஞ்சித்!

தியேட்டரில்தான் ஜனநாயகம்.. ஓடிடி பிரச்னைகளை வெளிப்படையாக பேசிய பா. ரஞ்சித்!

பா. ரஞ்சித்

பா. ரஞ்சித்

சிறிய பட்ஜெட் படங்களுக்கு மக்களுடைய ஆதரவு இருக்கிறதா என்று கேட்டால் அது குறைவு என்றுதான் நான் கூறுவேன் – பா ரஞ்சித்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிறிய பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ள பா. ரஞ்சித் அவற்றை விவரித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்று ரஞ்சித் பேசியதாவது- சிறிய பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. 80 லட்ச ரூபாய் வரை செலவு செய்தால் தான் சிறிய படங்களை ரிலீஸ் செய்ய முடியும். அப்படி செய்தாலும் தியேட்டர்கள் அதிகம் கிடைக்காது. காலை 10 மணி ஷோ கொடுப்பார்கள். அதிக வரவேற்பு இல்லாத திரையரங்குகள் கிடைக்கும். ஓ.டி.டி. தளங்களில் சிறிய பட்ஜெட் படங்களை செய்வது கஷ்டம். பெரிய பட்ஜெட் படங்களை விற்பனை செய்வதே பெரிய போராட்டமாக இருக்கிறது.

ஓடிடியில் விற்பனை செய்தால்தான் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியும். அதன் மூலம்தான் தயாரிப்பாளர்களுக்கு செலவு செய்ததில் ஓரளவு காசு கிடைக்கும். ஓடிடி வெளியீட்டிற்காக ஒரு படத்தை முடித்துவிட்டு 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஓ.டி.டி. நிர்வாகிகளுக்கு படத்தை போட்டு காட்டும்போது, அதில் ஒரு சிலர் நிராகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த தகவல் மற்ற ஓ.டி.டி. நிறுவனங்களுக்கும் சென்று சேர்ந்துவிடும். முன்பு விநியோகஸ்தர்களில் ஒரு தரப்பினர் படத்தை பார்த்து ஓகே சொன்னாலே போதும். படத்தை ஓரளவு தியேட்டரில் வெளியிட முடியும். படத்தை வெளியிடுவதில் திரையரங்குகளில் தான் அதிக ஜனநாயகம் இருப்பதாக கருதுகிறேன். ஒருமுறை நெட்பிளிக்ஸ் நிறுவன நிர்வாகிகளை சந்தித்தபோது ‘பெரிய பட்ஜெட் படங்களை நீங்கள் வாங்குகிறீர்கள், அதேபோன்று தரமான சிறிய பட்ஜெட் படங்களை பார்த்துவிட்டு நீங்கள் வாங்கலாமே?’ என்று கோரிக்கை வைத்தேன்.

அவர்கள் தங்களுக்கு நிதி செலவுகள் வரம்புக்கு உட்பட்டது என்று கூறி விளக்கமளித்தனர். ஒரு குறிப்பிட்ட பணத் தொகைக்குள் படங்களை வாங்க வேண்டும் என்று தங்களுக்கு கட்டுப்பாடு இருப்பதாக அவர்கள் கூறினர். எனவே இத்தகைய சிக்கல்கள் சிறிய பட்ஜெட் படங்களுக்கு உள்ளன. சிறிய பட்ஜெட் படங்களுக்கு மக்களுடைய ஆதரவு இருக்கிறதா என்று கேட்டால் அது குறைவு என்றுதான் நான் கூறுவேன். சமீபத்தில் வெளியான லவ்டுடே படத்தை தவிர்த்து மற்ற குறைந்த பட்ஜெட் படங்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: Pa. ranjith