Home /News /entertainment /

‘எத்தனையோ லெஜெண்ட்ஸ் முயற்சித்தார்கள்… ஆனால் செய்து முடித்தவர் மணிரத்னம்’ – ஜெயம் ரவி புகழாரம்

‘எத்தனையோ லெஜெண்ட்ஸ் முயற்சித்தார்கள்… ஆனால் செய்து முடித்தவர் மணிரத்னம்’ – ஜெயம் ரவி புகழாரம்

மணி ரத்னம் - ஜெயம் ரவி

மணி ரத்னம் - ஜெயம் ரவி

நல்ல நடிப்பிற்கு, நல்ல இயக்கத்திற்கு, நல்ல காட்சிகளுக்கு கைதட்டுவார்கள். ஆனால் நம் தமிழ் ரசிகர்கள் ஒவ்வொரு நல்ல ஷாட்டுக்கும் கைதட்டுவார்கள். – ஜெயம் ரவி

    பொன்னியின் செல்வனை படமாக்குவதற்கு எத்தனையோ லெஜெண்ட்ஸ் முயற்சித்தார்கள். ஆனால் அதை செய்து முடித்தவர் மணி ரத்னம் என்று அவருக்கு நடிகர் ஜெயம் ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.

    பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பம் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்திலிருந்து முதல் பாடலாக ஏ.ஆர்.ரகுமான் குரலில் பொன்னி நதி இன்று வெளியிடப்பட்டது.

    இதையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் படத்தின் நாயகன் ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவின்போது நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், உலக சினிமாக்கள் நாம் பார்த்துள்ளோம். நல்ல நடிப்பிற்கு, நல்ல இயக்கத்திற்கு, நல்ல காட்சிகளுக்கு கைதட்டுவார்கள்.  ஆனால் நம் தமிழ் ரசிகர்கள் ஒவ்வொரு நல்ல ஷாட்டுக்கும் கைதட்டுவார்கள்.

    அப்படி இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி உள்ளனர்.  பொன்னியின் செல்வன் சிறப்பாக வந்திருக்கிறது என தெரிவித்தார்.

    ‘பொன்னியின் செல்வன் நம் படம், தமிழர்கள் படம்’ – பாடல் வெளியீட்டு விழாவில் கார்த்தி எமோஷனல்…

    மேலும் தனக்கு குதிரை ஓட்டுவது பயம், அந்த பயத்தை போக்கியவர் நடிகர் கார்த்தி.  அவர்தான் குதிரை ஓட்ட பயிற்சி கொடுத்தார் எனவும் தெரிவித்தார்.  அதேபோல் இந்த திரைப்படத்தின் இயக்குநர் மணிரத்னம் என்னுடைய ஹீரோ,  நம்முடைய ஹீரோ.  எத்தனையோ லெஜெண்ட்ஸ் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயற்சித்தார்கள்.  ஆனால் அதை மணிரத்னம் சாத்தியமாக்கியுள்ளார்.

    தமிழில் வெளியான சந்திரலேகா படம் நாம் எல்லோரும் பெருமைப்படும் வகையில் இருக்கும்.  அதுபோன்று பெரிய பட்ஜெட்டில் மீண்டும் ஒரு படம் உருவாக தயாரிப்பாளர் சுபாஷ் கரன் காரணமாக இருந்துள்ளார்.

    அத்துடன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நான் நடித்ததில்லை. பொன்னியின் செல்வன் மூலம் முதன் முறையாக நடித்துள்ளேன். இது போல இந்த திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய நிறைய கனவுகள் நிறைவேறி இருக்கின்றன என பெருமிதம் அடைந்தார்.

    பொன்னியின் செல்வன் சாதாரண திரைப்படம் கிடையாது. ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்துள்ளனர்.  இது உங்களுக்காக எடுத்த படம் எனவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

    பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் உள்ளிட்டோர் படமாக்க முயற்சித்தனர். ஆனால், மணி ரத்னம் மட்டுமே அதனை செய்து முடித்திருக்கிறார்.

    பொன்னியின் செல்வன் முதல் பாடலை பார்க்க...



    பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் பொன்னி நதி பாடலை ஏ.ஆர்.ரஹ்மன் இசையமைத்து பாடியுள்ளார். அந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி