• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மன்சூர்அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்: உயர் நீதிமன்றத்தில் மனைவி வழக்கு

மன்சூர்அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்: உயர் நீதிமன்றத்தில் மனைவி வழக்கு

மன்சூர் அலி கான்

மன்சூர் அலி கான்

சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிராக மன்சூர் அலிகான் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

  • Share this:
    சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீடு அரசு புறம்போக்கு நிலம் 2,400 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டியிருப்பதால் மாநகாட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்சூர் அலிகானின் மனைவி அபிதா பானு மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், 18 ஆண்டுகளுக்கு முன் 2,400 சதுர அடி நிலத்தை அப்பாவு மற்றும் அவரது மகன் பாரி ஆகியோர், தன்னிடம் விற்று விட்டதாகவும், பிறகு அது அரசு புறம்போக்கு நிலம் என தெரியவந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீட்டை காலி செய்யக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தான் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்து விட்ட நிலையில், தான் தொடர்ந்த சீராய்வு மனு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 21 ஆம் தேதி எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தங்களை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது சட்ட விரோதம் எனவும் தெரிவித்துள்ளார். வீட்டில் தங்களுடைய உடமைகள் மட்டுமல்லாமல் 2 வெளிநாட்டு பூனைகளையும் வைத்து அதிகாரிகள் பூட்டி விட்டதால், அவை உணவின்றி தவிப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் வைத்த சீலை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: