• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விவேக் மரணத்துக்கு தடுப்பூசி தான் காரணம் என்று சொன்ன மன்சூர் அலிகான் மீது புகார்

விவேக் மரணத்துக்கு தடுப்பூசி தான் காரணம் என்று சொன்ன மன்சூர் அலிகான் மீது புகார்

நடிகர் விவேக் | மன்சூர் அலிகான்

நடிகர் விவேக் | மன்சூர் அலிகான்

விவேக் மரணத்தில் தடுப்பு ஊசி தான் காரணம் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்திற்கு அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக தொலைத் தொடர்பு மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை பயன்பாட்டை தொடங்கி வைத்தார் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 100 இணைப்புகளைக் கொண்ட கொரோனா கட்டுப்பாட்டு மையம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 044-46122300 044-25384520 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் அழைக்கலாம். கடந்த முறை 4 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. தற்போது கொரோனா அதிகமாக பரவி வருவதால் மீண்டும் தொலைத்தொடர்பு ஆலோசனை மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் தடுப்பூசி கொரோனா தடுப்பூசி குறித்தான சந்தேகங்கள், கொரோனா குறித்த அடிப்படை சந்தேகம் குறித்து மக்கள் அழைக்கலாம். வீட்டு தனிமையில் உள்ளவர்களை தினமும் சுழற்சி முறையில் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கி கண்காணிக்கப்படும்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான ஏற்பாடு தான் இந்த கட்டுப்பாடு அறை மற்றும் ஆலோசனை மையம். நல்ல முறையில் இந்த சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிராங்க் கால் செய்யக்கூடாது.



விவேக் ஒரு சிறந்த மனிதர் அவரது இறப்பு மிகப்பெரிய துரிதிஷ்ட வசமான நிகழ்வு. அவதூறு பரப்பாமல் இருப்பதே மனதார நாம் செலுத்தும் அஞ்சலி. தடுப்பூசி குறித்தான அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி குறித்து தவறான வதந்தியை பார்ப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் குறிப்பாக விவேக் மரணத்தில் தடுப்பு ஊசி தான் காரணம் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்திற்கு அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் வழக்கு பதிவு செய்யப்படும்

யாரும் பாதிக்காத வண்ணம் புதிய கட்டுப்பாடு வர உள்ளது நாளை அது குறித்தான அறிவிப்பு வெளியாகும். படிப்படியாக சென்னையில் தினமும் 25000 பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளோம்.12, 600 படுக்கைகள் கொரோனா மையங்களில் தயார் நிலையில் உள்ளது அதில் இதுவரை 1,104 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது.

சென்னையில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. 3 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. 13 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட்டோம் எனவும் ஜூலை மாத இறுதிக்குள் 45 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி முழுமையாக செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

கட்டுப்பாடு பகுதிகளாக சென்னையில் மூன்று பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட 475 தெருக்கள் உள்ளன. ஆறு நபருக்கு மேல் பாதிக்கப்பட்ட 363 தெருக்கள் உள்ளன. பத்து நபருக்கு மேல் பாதிக்கப்பட்ட 108 தெருக்கள் உள்ளன.” இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: