Home /News /entertainment /

Mansoor Ali Khan: தீவிர நடன பயிற்சியில் மன்சூர் அலிகான் - கவனம் ஈர்க்கும் வீடியோ!

Mansoor Ali Khan: தீவிர நடன பயிற்சியில் மன்சூர் அலிகான் - கவனம் ஈர்க்கும் வீடியோ!

மன்சூர் அலிகான் நடனம்

மன்சூர் அலிகான் நடனம்

நேர்க்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், “எனக்கு அவரோட ஆட்டிட்யூட் ரொம்பவும் பிடிக்கும். அவரைப் பார்க்கும் போதெல்லாம், அவருக்காக எதாச்சும் எழுதனும்ன்னு தோணும்" என்றார்.

    நடிகர் மன்சூர் அலிகான் நடன பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

    90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருபவர் நடிகர் மன்சூர் அலிகான் தான். பிரபு நடித்த ‘வேலை கிடைச்சுருச்சு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான், அதன் பின்னர் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.

    வில்லன் நடிப்புக்காக எவ்வளவு ரசிகர்களைப் பெற்றிருக்கிறாரோ, அதே அளவு தனது நடனத்துக்காகவும் நிறைய ரசிகர்களைப் பெற்றிருக்கிறார் மன்சூர் அலிகான். ஆட்டமா தேரோட்டமா, சக்கு சக்கு வத்திக்குச்சி, காபி தண்ணி போடட்டுமா என அவர் நடனமாடிய பாடல்களை பட்டியலிடலாம். குறிப்பாக சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில், அவரின் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் பின்னணியில் ஒலிக்கும்.

    31 வருட இடைவெளியில் வாரிசைப் பெற்றெடுத்த வாரிசு தயாரிப்பாளர்!

    இது குறித்து நேர்க்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், “எனக்கு அவரோட ஆட்டிட்யூட் ரொம்பவும் பிடிக்கும். அவரைப் பார்க்கும் போதெல்லாம், அவருக்காக எதாச்சும் எழுதனும்ன்னு தோணும். கைதி படத்துல அவரை தான் மெயின் கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்திருந்தேன்” என்று தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில் தற்போது டான்சர்களுடன் மன்சூர் அலிகான் நடன பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி