800 படத்தை எந்த திரையரங்கிலும் ஓட விட மாட்டோம் - மன்சூர் அலிகான்

கதாநாயகனுக்கு ஏற்ற மனிதர் அல்ல முத்தையா முரளி. எனவே 800  படத்தை எந்த திரையரங்கிலும் நாம் தமிழர் கட்சி ஓட விட மாட்டோம் என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.

800 படத்தை எந்த திரையரங்கிலும் ஓட விட மாட்டோம் - மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்
  • News18
  • Last Updated: October 17, 2020, 8:35 PM IST
  • Share this:
800 படத்தை எந்த திரையரங்கிலும் ஓட விட மாட்டோம் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து பேசிய மன்சூர் அலிகான், சினிமாவுக்கு மொழி, இனம் இல்லை. ஆனால் தமிழ்கத்தில் எவ்வளவு நயவஞ்சகங்கள் நிகழ்த்தப்படுகின்றன என்பது நமக்கு தெரியும்.

சினிமவை சார்ந்து அது உள்ளது. முத்தையா முரளிதரன் ஒரு தமிழின துரோகி. திருச்சி அருகில் இருந்து போயிருந்தாலும் அவர் ஒரு துரோகி. பல நாடுகளின் உதவியால் ஈழம் நயவஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டது.


Also read... பிக்பாஸ் வீட்டில் முகமூடிகள் அவிழ ஆரம்பித்துவிட்டது: இந்த வாரம் வெளியேறப்போவது யார்?... கமல் சூசகம்!

கதாநாயகனுக்கு ஏற்ற மனிதர் அல்ல முத்தையா முரளி. எனவே 800  படத்தை எந்த திரையரங்கிலும் நாம் தமிழர் கட்சி ஓட விட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விஜய் சேதுபதி நடிக்கிறது வேஸ்ட். கிரிக்கெட் வீரராக தமிழர்கள் இல்லையா? ஹாக்கி வீரர் இல்லையா? என்று கேள்வி எழுப்பிய மன்சூர் அலிகான் தமிழினத்துக்கு துரோகம் செய்ய நினைக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading