முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு மன்சூர் அலிகான் அட்டகாச நடனம்!

விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு மன்சூர் அலிகான் அட்டகாச நடனம்!

விஜய் - மன்சூர் அலிகான்

விஜய் - மன்சூர் அலிகான்

ஹலமதி ஹபீபோ என்ற அந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு நடிகர் மன்சூர் அலிகான் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்-மாரி செல்வராஜ் கூட்டணியில் மாமன்னன்!

பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ பாடல் வெளியானது. ஹலமதி ஹபீபோ என்ற அந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

தென்னிந்திய சினிமாவில் இதுதான் ஃபர்ஸ்ட்... பட்டையைக் கிளப்பும் விஜய்யின் அரபிக் குத்து!

' isDesktop="true" id="710313" youtubeid="W8YEMOjH2wU" category="cinema">

இந்தப் பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் கடற்கரையில் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Anirudh