ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யுடன் தளபதி 67-ல் நடிப்பதை உறுதி செய்த வில்லன் நடிகர்!

விஜய்யுடன் தளபதி 67-ல் நடிப்பதை உறுதி செய்த வில்லன் நடிகர்!

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தில் இடம்பெற்றிருப்பதை நடிகர் மன்சூல் அலிகான் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். தயாரிப்பாளர்களால் அதிகம் தேடப்படும் ஹீரோவாகவும் இருக்கிறார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அவர், பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இதற்கிடையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் விஜய்யின் அடுத்தப் படம் இந்த மாத தொடக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'தளபதி 67' என்று அழைக்கப்படும், இந்தப் படம் இப்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் படமாக உள்ளது மறுக்க முடியாதது. வாரிசு படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு தளபதி 67 படத்தை, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில், மூத்த தமிழ் நடிகர் மன்சூர் அலிகான், விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தில் இடம்பெறுவதை உறுதிப்படுத்தினார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தளபதியின் முதல் படத்திலிருந்து நான் அவருடன் நடித்தேன். அவருடைய முதல் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தேன். நாங்கள் 10-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். சமீபமாக என்னால் அவருடன் நடிக்க முடியவில்லை. விஜய்யின் அடுத்தப் படத்தில் அவருடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

Mansoor Ali Khan confirms acting with Vijay in Thalapathy 67, Thalapathy 67, Mansoor Ali Khan in Vijay Thalapathy 67, Lokesh Kanagaraj to direct Thalapathy Vijay Thalapathy 67, thalapathy vijay lokesh kanagaraj, lokesh kanagaraj thalapathy vijay, director lokesh kanagaraj, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ், thalapathy 67, thalapathy 67 movie, thalapathy 67 director, thalapathy 67 heroine, thalapathy 67 cast, thalapathy 67 poster, thalapathy 67 twitter, thalapathy 69, thalapathy 68, thalapathy 66, mansoor ali khan movies, mansoor ali khan director, mansoor ali khan wife, mansoor ali khan tamil actor, மன்சூர் அலி கான் திரைப்படங்கள்
மன்சூர் அலிகான்

லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மன்சூர் அலி கானுக்காக 'கைதி' கதையை அவர் எழுதியதாக முன்பு தெரிவித்தார். தற்போது அவர்கள் இறுதியாக தளபதி 67-ல் இணைகிறார்கள். விஜய் மற்றும் மன்சூர் தவிர, த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், நிவின் பாலி, கவுதம் மேனன் மற்றும் பலர் மிகவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay